வாழ்நாயக்கன்பாளையம் சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா


வாழ்நாயக்கன்பாளையம் சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
x

வாழ்நாயக்கன்பாளையம் சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

நாமக்கல்

கந்தம்பாளையம்:

கந்தம்பாளையம் அருகே வாழ்நாயக்கன்பாளையத்தில் செல்வ விநாயகர், சக்தி மாரியம்மன், பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி கடந்த 26-ந் தேதி காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டது. நேற்று முன்தினம் திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, திருமகள் வழிபாடு, முளைப்பாரி வழிபாடு நடந்தது. தொடர்ந்து முதல் கால யாகம், 2-வது கால யாகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் கோவில் கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதனை பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் நடத்தி வைத்தார். தொடர்ந்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர் சாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் செய்திருந்தனர்.


Next Story