தோட்டக்கலை மாணவ-மாணவிகளுக்கு களப்பயிற்சி


தோட்டக்கலை மாணவ-மாணவிகளுக்கு களப்பயிற்சி
x

அருப்புக்கோட்டை அருகே தோட்டக்கலை மாணவ-மாணவிகளுக்கு களப்பயிற்சி நடைபெற்றது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு கீழ் இயங்கும் அருப்புக்கோட்டை மண்டல ஆராய்ச்சி நிலையம், வேளாண்மை அறிவியல் நிலையத்தில் 2-ம் ஆண்டு பயிலும் தோட்டக்கலை கல்லூரி மாணவ, மாணவியர்கள் 78 பேர் கல்வி சுற்றுலாவாக வருகை புரிந்தனர். இவர்களுக்கு வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜாபாபு, மண்டல ஆராய்ச்சி நிலையம் மற்றும் வேளாண் அறிவியல் நிலையத்தில் செயல்பட்டு கொண்டு இருக்கும் திட்டங்கள் குறித்தும், மண்டல ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் அகிலா காளான் வளர்ப்பு பற்றியும், வானிலை பதிவாளர் ஐஸ்வர்யலட்சுமி வேளாண் அறிவியல் நிலையத்தில் செயல்படும் தானியங்கி வானிலை நிலையம் பற்றியும், பண்ணை தொழிலாளர் பார்த்தசாரதி மானாவாரிக்கு ஏற்ற பயிர்களை ஓட்டுக்கட்டுதல் பற்றியும் விளக்கம் அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் வேளாண் அறிவியல் நிலையத்திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜாபாபு மற்றும் பலர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள், வேளாண் அறிவியல் நிலைய அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story