தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து


தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து
x

சேத்தூரில் தென்னை நார் தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டது.

விருதுநகர்

ராஜபாளையம்.

சேத்தூரில் தென்னை நார் தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டது.

தொழிற்சாலை

ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் மேட்டுப்பட்டி பகுதியில் தென்னை மட்டையிலிருந்து நார் பிரிக்கும் தொழிற்சாலை உள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவருக்கு சொந்தமான தொழிற்சாலையில் 20 லோடு தென்னை மட்டை குவியலாக இருந்தது.

இதில் திடீரென தீப்பற்றியது. இதுகுறித்து தகவலறிந்து ராஜபாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராமன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பரபரப்பு

தீயணைப்பு வீரர்கள் 3 மணி ேநரம் போராடி தீயை அணைத்தனர். தொழிற்சாலையில் தென்னை மட்டை குவிக்கப்பட்டு இருந்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சேத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ெதன்னை நார் ெதாழிற்சாலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story