திட்டக்குடி அருகே அடுத்தடுத்து 2 வீடுகள் எரிந்து சாம்பல் ரூ.7¼ லட்சம் நகை-பணம் சேதம்


திட்டக்குடி அருகே  அடுத்தடுத்து 2 வீடுகள் எரிந்து சாம்பல்  ரூ.7¼ லட்சம் நகை-பணம் சேதம்
x

திட்டக்குடி அருகே அடுத்தடுத்து 2 வீடுகள் எரிந்தது. இதில் ரூ.7¼ லட்சம் நகை-பணம் சேதமானது.

கடலூர்


ராமநத்தம்,

திட்டக்குடி அடுத்துள்ள கோழியூரைச் சேர்ந்தவர் மொட்டையன்(வயது 95). இவருடைய மகன்கள் சின்னட்டு(52), நலத்தம்பி(42) இருவரும் அருகருகே குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று சின்னட்டுவின் கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்று வீசியதால் தீ மளமளவென எரிந்து அருகில் இருந்த நலத்தம்பியின் கூரை வீட்டின் மீதும் பரவியது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த திட்டக்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

இருப்பினும் 2 கூரை வீடுகளும் அதில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் ரூ.7¼ லட்சம் மதிப்புள்ள நகை-பணம் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. தீ விபத்து நடந்த இடத்தை திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காவியா நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதில் மின் கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்ததாகவும்,


அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதும் தெரியவந்தது. இது குறித்து திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story