காமராஜரின் பொற்கால ஆட்சியை தந்து கொண்டிருப்பவர் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்;ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ெபருமிதம்


காமராஜரின் பொற்கால ஆட்சியை தந்து கொண்டிருப்பவர் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்;ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ெபருமிதம்
x

காமராஜரின் பொற்கால ஆட்சியை தந்து கொண்டிருப்பவர் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

ஈரோடு

காமராஜரின் பொற்கால ஆட்சியை தந்து கொண்டிருப்பவர் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

அடிப்படை தேவைகள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் நேற்று ஸ்டோனி பாலம் அருகே உள்ள மீன் மார்க்கெட்டில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவர் விருப்பப்பட்டு இந்த தேர்தலில் நிற்கவில்லை. மகன் விட்டுச்சென்ற பணிகளை மீண்டும் தொடங்குவதற்காகவும், இந்த தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்வதற்காகவும் போட்டியிடுகிறார்.

பொற்கால ஆட்சி

மக்களின் எழுச்சியை பார்க்கும் போது மிகத் தெளிவாக அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். திருமகன் ஈவெராவின் இழப்பு என்பது காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பு. கிராமங்கள் தோறும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது இந்த அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. பொற்கால ஆட்சியாக காமராஜர் ஆட்சி இருந்தது. அந்த ஆட்சியை தற்போது தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தந்து கொண்டிருக்கிறார்.

பிளஸ்-2 படித்து முடித்தவுடன் எங்கள் பகுதியை சேர்ந்த பெரும்பாலான பெண்கள் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபடுவார்கள். ஆனால் தற்போது பிளஸ்- 2 படித்து விட்டு, மேல் கல்வியை தொடரும் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக முதல்- அமைச்சர் அறிவித்துள்ளது பெண்களிடையே மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இனி வரும் காலங்களில் அனைவரும் பட்டதாரி பெண்களாகவே இருப்பார்கள். ராகுல் காந்தியின் பாதயாத்திரை மிகப்பெரிய வெற்றி பயணமாக அமைந்தது. மோடியின் வேஷம் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து வருகிறது. 2024 பாராளுமன்ற தேர்தலில் மக்கள் பாரதீய ஜனதா கட்சிக்கு சரியான பாடம் புகட்டுவார்கள். ராகுல் காந்தி சரித்திர வெற்றி பெறுவார்.

இவ்வாறு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

அப்போது அவருடன் மகிளா காங்கிரஸ் மாநில தலைவி சுதா, மாநகர பொறுப்பாளர் திருச்செல்வம், மண்டல தலைவர் சசிகுமார், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் விஜய் கண்ணா, நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் வி.எம்.கே.அழகிய நம்பி, கவுன்சிலர் வனிதா காமராஜ் உள்பட பலர் இருந்தனர்.


Next Story