வேளாண்மை கணக்கெடுப்பு பணி அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சி தொடக்கம்


வேளாண்மை கணக்கெடுப்பு பணி அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சி தொடக்கம்
x

வேளாண்மை கணக்கெடுப்பு பணி அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சி தொடக்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 11-வது வேளாண்மை கணக்கெடுப்பு (2021-22) முதல்கட்ட பயிற்சி வகுப்புகள் தொடக்க நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி தலைமை தாங்கி, பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், 5 ஆண்டுக்கு ஒரு முறை மத்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சகத்தால் மேற்கொள்ளப்படும் 2020-21-ல் 11-வது கணக்கெடுப்பு கொரோனா தொற்று பரவல் காரணமாக தற்போது செப்டம்பர் முதல் வாரத்தில் கணக்கெடுப்பு பணி தொடங்கி நடக்க உள்ளது. விவசாயம் எந்த அளவில் நடக்கிறது, விவசாயத்தில் நேரடியாகவும், குத்தகை விவசாயத்திலும் எத்தனை பேர் ஈடுபட்டுள்ளனர். எவ்வளவு பரப்பளவில் அடிப்படையில் சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகள் விவசாயம் செய்கின்றனர். ஆண், பெண் விவசாயிகள் வாரியாகவும், சமூக அடிப்படையிலும் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. கணக்கெடுப்பாளர்களாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அரசு விதித்துள்ள விதிகளின்படி கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 11-வது வேளாண்மை கணக்கெடுப்பு பணி அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சி தொடக்கம் இந்த ஆண்டு முதல் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும். இந்த கணக்கெடுப்பின் அடிப்படையில் தொடர்ந்துவரும் காலங்களில் விவசாயிகளுக்கான வளர்ச்சித் திட்டங்கள் வகுக்கப்படும் என்றார்.


Next Story