விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாமக்கல்லில் போலீசார் கொடி அணிவகுப்பு


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாமக்கல்லில் போலீசார் கொடி அணிவகுப்பு
x

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாமக்கல்லில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

நாமக்கல்

நாமக்கல்:

கொடி அணிவகுப்பு

நாடு முழுவதும் இன்று (புதன்கிழமை) விநாயகர் சதர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆங்காங்கே சாலையோரம், தெருக்கள் உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்படும். தொடர்ந்து சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, நீர் நிலைகளில் கரைக்கப்படும். இந்த விழாவின் போது, அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலும், ஊர்வலத்தை அமைதியாக நடத்த வேண்டியும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும், நாமக்கல் மாவட்ட போலீஸ் சார்பில் கொடி அணிவகுப்பு நேற்று நாமக்கல்லில் நடத்தப்பட்டது.

200 போலீசார் பங்கேற்பு

நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி தலைமை தாங்கி, கொடி அணிவகுப்பை தொடங்கி வைத்தார். நாமக்கல் பலப்பட்டறை மாரியம்மன் கோவிலில் தொடங்கிய அணிவகுப்பு தட்டாரத்தெரு, மேட்டுத்தெரு, பஸ் நிலையம், மணிக்கூண்டு வழியாக சென்று பூங்கா சாலையில் முடிந்தது.

இந்த கொடி அணிவகுப்பில் நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், நாமக்கல், நல்லிபாளையம், மோகனூர், புதுச்சத்திரம், சேந்தமங்கலம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என மொத்தம் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story