சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

கயத்தாறில் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தினை அனைத்து பள்ளிகளிலும் விரிவுபடுத்த கோரியும், இந்த திட்டத்தில் சத்துண ஊழியர்கள் மூலம் உணவு சமைத்து வழங்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கயத்தாறு வட்டார தலைவர் மாரியம்மாள் தலைமை தாங்கினார். சங்க வட்டார பொருளாளர் ஆனந்தன் வரவேற்புரை ஆற்றினார். சங்க மாவட்ட செயலாளர் செல்லத்துரை கோரிக்கைகளை விளக்கி பேசிநார். அரசு ஊழியர் சங்க வட்டார தலைவர் மகாராஜன், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாவட்ட பொருளாளர் சுப்பையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆச்சியம்மாள் நன்றி கூறினார்.


Next Story