காவேரிப்பாக்கம், வாலாஜாவில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
காவேரிப்பாக்கம், வாலாஜாவில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நேற்று மாலை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்பாட்டம் நடத்தினர். ஆர்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். சுந்தரேசன், ஜீவா, கவிதா, தீபா, மைதிலி, ரேகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணைத் தலைவர் குபேரன் வரவேற்றார். மாவட்ட இணை செயலாளர் கலைசெல்வி கோரிக்கை விளக்கவுரையாற்றினார். மாவட்ட தலைவர் செல்வம் சிறப்புரையாற்றினார். இந்த ஆர்பாட்டத்தில் தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டதினை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி சத்துணவு ஊழியர்கள் மூலம் சமைத்து வழங்கிட வலியுறுத்தி கோஷமிட்டனர். முடிவில் ஒன்றிய பொருளாளர் வனிதா நன்றி கூறினார்.
இதே போன்று காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றிய தலைவர் சேகர் தலைமை தாங்கினார். பொறுப்பாளர்கள் ரோஸ், பத்மா, பவுன், சரஸ்வதி, பொற்கொடி, செல்வி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் திலகவதி வரவேற்றார். இதில் 30-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.