பஞ்சாயத்து தலைவர்களுக்கு தேசியக்கொடி வழங்கல்
கயத்தாறு யூனியனில் பஞ்சாயத்து தலைவர்களுக்கு தேசியக்கொடி வழங்கப்பட்டது.
தூத்துக்குடி
கயத்தாறு:
கயத்தாறு யூனியன் அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டம் யூனியன் தலைவர் மாணிக்கராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருகிற 15-ந்தேதி சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைத்து குடியிருப்பு வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றி வேண்டும். தொடர்ந்து 3 நாட்கள் தேசிய கொடியை பறக்க விடவேண்டும் என்று ஆலோசனை வழங்கிய யூனியன் தலைவர், 45 பஞ்சாயத்து தலைவர்களுக்கும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேசிய கொடிகளை யூனியன் தலைவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரவிந்தன், பானு, யூனியன் மேலாளர் சுப்பையா மற்றும் 45 பஞ்சாயத்து தலைவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story