போலி உயில் மூலம் சொத்து பறிப்பு


போலி உயில் மூலம் சொத்து பறிப்பு
x
தினத்தந்தி 18 Feb 2023 6:45 PM GMT (Updated: 18 Feb 2023 6:46 PM GMT)

போலி உயில் மூலம் சொத்து பறிக்கப்பட்டதாக போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

ராமநாதபுரம்

காரைக்குடி செஞ்சை சண்முகம்நகர் திவான் பகதூர் தெருவை சேர்ந்தவர் அழகர்சாமி மனைவி ராஜேஸ்வரி (வயது 52). அழகர்சாமிக்கு சொந்தமாக ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் நிலங்கள், வீடு மற்றும் பாத்திரக்கடை உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அழகர்சாமி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இறந்துவிட்டாராம். குழந்தைகள் இல்லாததாலும், அழகர்சாமிக்கு பெற்றோர் இறந்துவிட்டதாலும் ராஜேஸ்வரிதான் மேற்கண்ட சொத்துக்களின் வாரிசாக இருந்து வந்தாராம்.

இந்த சூழ்நிலையில் அழகர்சாமி இறக்கும் முன்பாக எழுதி வைத்ததாக போலியான உயில் தயார் செய்து அழகர்சாமியின் தம்பி ஆர்.எஸ்.மங்கலம் அர்ச்சுணன் என்பவர் அழகர்சாமியின் சொத்துக்கள் மட்டுமல்லாது ராஜேஸ்வரியின் சொத்துக்களையும் கையகப்படுத்தி கொண்டு அனுபவம் செய்யவிடாமல் தடுத்து வந்தாராம். இதுகுறித்து ராஜேஸ்வரி ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் புகார் செய்தார். அவரின் உத்தரவின்பேரில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story