பெண் கொலை வழக்கில் கள்ளக்காதலன் கைது


பெண் கொலை வழக்கில் கள்ளக்காதலன் கைது
x

ஏழாயிரம்பண்ணை அருகே பெண் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர்

தாயில்பட்டி,

ஏழாயிரம்பண்ணை அருகே பெண் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்காதல்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள ஊத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி(வயது 45). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி ராஜேசுவரி(40). இவருக்கும் சாத்தூர் அருகே உள்ள சங்கரநத்தம் கிராமத்தை சேர்ந்த தொழிலாளியான பரமசிவம் (42) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது.

இதனால் மனைவியை முத்துப்பாண்டி கண்டித்தார். பின்னர் ராஜேசுவரி கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். பின்னர் சமரசம் ஏற்பட்டு இருவரும் சேர்ந்தனர். அதன்பின்பு, கள்ளக்காதலனான பரமசிவத்துடன் அவர் பேசுவதை நிறுத்தி கொண்டதாக கூறப்படுகிறது.

பெண் கொலை

இதையடுத்து ராஜேசுவரி வீட்டில் தனியாக இருந்ததை அறிந்த பரமசிவம் அங்கு வந்து அவரிடம் பேச முயற்சித்தார். ஆனால் அவர் பேசவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், ராஜேசுவரியை தாக்கி கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து ஏழாயிரம் பண்ைண போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், சப்-இன்ஸ்பெக்டர் செய்யது இப்ராகிம் தலைமையில் தனிப்படை அமைத்து பரமசிவத்தை தேடி வந்தனர். சங்கரநத்தம் வைப்பாற்று பகுதியில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

வாக்குமூலம்

பின்னர் பரமசிவம், போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

நான் கடந்த 2 ஆண்டுகளாக ராஜேசுவரியுடன் தாலிகட்டாத கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தேன். பின்னர் எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் என்னை விட்டு கொஞ்சம், கொஞ்சமாக அவர் விலக ஆரம்பித்தார். பின்னர் கணவருடன் வாழ போவதாக சென்று விட்டதால் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன்.

இந்தநிலையில் அவர் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்தேன். இதையடுத்து அவரை கொலை செய்து விட்டு காட்டுப்பகுதியில் தலைமறைவாக வாழ்ந்து வந்தேன். அப்போது அங்குள்ள தோட்டங்களில் உரிமையாளர்களுக்கு தெரியாமல் கொய்யா, வெள்ளரிக்காய், நுங்கு, இளநீர், காய்கறிகளை, இரவு நேரங்களில் பறித்து சாப்பிட்டுவிட்டு அங்கேயே தலைமறைவாக வாழ்ந்து வந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story