புதிய ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டு விழா


புதிய ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டு விழா
x

மானூரில் புதிய ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது

திருநெல்வேலி

பேட்டை:

மானூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட களக்குடி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு மானூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கி புதிய ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதிகள் வின்சென்ட், முகமது அலி, களக்குடி ஊராட்சி மன்ற தலைவர் மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story