கால்நடைகளுக்கான இலவச சிகிச்சை முகாம்


கால்நடைகளுக்கான இலவச சிகிச்சை முகாம்
x

கால்நடைகளுக்கான இலவச சிகிச்சை முகாம்

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் மேலபூவனூர் கிராமத்தில் கால்நடைகளுக்கான இலவச சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமில் டாக்டர் சபாபதி தலைமையில் மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு தடுப்பூசி மற்றும் சிகிச்சைகளை மேற்கொண்டனர். இதில் 41 விவசாயிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 45 மாடுகளுக்கு வாய்க்காணை தடுப்பூசியும், 193 ஆடுகளுக்கு பி.பி.ஆர். தடுப்பூசியும், 300 கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் தடுப்பூசியும், 6 நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசியும் போடப்பட்டது. 23 கன்றுகள், 93 ஆடுகள் மற்றும் 10 நாய்களுக்கு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டது. 11 கறவை பசுக்களுக்கு மலடு நீக்க சிகிச்சை செய்யப்பட்டது. முகாமில் கன்றுகள் மற்றும் ஆடுகளுக்கான தனுவாஸ் தாது உப்பு கட்டி வழங்கப்பட்டது.


Next Story