வாணியம்பாடியில் நியூடவுன் ெரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் பொது மக்கள் அவதி


வாணியம்பாடியில் நியூடவுன்  ெரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் பொது மக்கள் அவதி
x
தினத்தந்தி 24 Dec 2022 6:45 PM GMT (Updated: 24 Dec 2022 6:45 PM GMT)

வாணியம்பாடியில் நியூடவுன் ெரயில்வே கேட் காலை மற்றும் மாலை நேரங்களில் தொடர்ந்து மூடப்படுவதால் போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் சிக்கி தவிக்கின்றனர். எனவே மேம்பாலம் அமைக்க விரைந்து நடவடிக்ைக எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

வாணியம்பாடியில் நியூடவுன் ெரயில்வே கேட் காலை மற்றும் மாலை நேரங்களில் தொடர்ந்து மூடப்படுவதால் போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் சிக்கி தவிக்கின்றனர். எனவே மேம்பாலம் அமைக்க விரைந்து நடவடிக்ைக எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நியூ டவுன் ரெயில்வே கேட்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரம் தோல் தொழிலில் முன்னணியில் உள்ள நகரமாகும். இந்த ெதாழில் மூலம் நாட்டி்கு அன்னிய செலாவணி அதிகசம் கிடைக்கிறது. வாணியம்பாடி பஸ் நிலையத்தில் இருந்து நகருக்குள் நியூடவுன், பெருமாள்பேட்டை, நேதாஜிநகர், ஜீவாநகர் போன்ற பகுதிகளுக்கும், கணவாய்புதூர் ஆலங்காயம், ஜமுனாமரத்தூர் பகுதி போன்ற ஊர்களுக்கும் செல்ல வேண்டுமென்றால் நியூ டவுன் ரெயில்வேல கேட்டை கடந்துதான் செல்ல வேண்டும்.

ஆனாலங் வாணியம்பாடி நகரானது சென்னை-சேலம்-கோவை மற்றும் சென்னை-பெங்களூரு ரெயில் மார்கத்தில் அமைந்துள்ளதால் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில் ம்றும் சரக்கு ரெயில்கள் 24 மணி நேரமும் செல்வதால் நியூ டவுன் ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுகிறது.

இதனால் வாகன ஓட்டிகள் பல மணி நேரம் ரெயில்வே கேட்டை கடக்க வேண்டி உள்ளது. எனவே பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று நியூ டவுன் ரெயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு 5 ஆண்டுக்கு முன்பு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டது.

கிடப்பில் போடப்பட்டது

பணிகள் தொடங்கப்பட்டு சாலை அமைக்க நகராட்சி மற்றும் ெரயில்வே துறை சார்பில் இடத்தை கையகப்படுத்துவதில் காலதாமதம் செய்வதாக கூறி திட்டம் கைவிடப்பட்டு கிடப்பில் போடப்பட்டது.

ரெயில்வே கேட் மூடப்பட்டதால் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிக்கு செல்லும் ஆயிரக்கணக்கான மக்களும், தோல் தொழிற்சாலைக்கு செல்லும் பணியாளர்களும் தோல் தொழில் அதிபர்களும் தினமும் 3 கிலோமீட்டர் தொலைவு சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியிருந்ததால் பெரும் அவதிக்கு ஆளாக நேர்ந்தது.


இந்த நிலையில் தனி நபர் ஒருவர் தொடர்ந்த வழக்கின் காரணமாக சென்னை ஐகோர்ட்டு நியூடவுன் ெரயில்வேகேட் பகுதியில் தடையை அகற்றி உடனே சாலையை சீரமைக்க உத்தரவிட்டதின் பேரில் பாலம் அமைக்கும் பணி தற்காலிகமாக கைவிடப்பட்டு இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ, கார், வேன், ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் மட்டும் மீண்டும் நியூடவுன் ெரயில்வே கேட் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது தி.மு.க.வின் சார்பில் வேலூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யான கதிர்ஆனந்த் தேர்தலின்போது தான் எம்.பி. ஆக பொறுப்பேற்றவுடன் உடனடியாக மேம்பாலம் கட்டும் பணியை விரைந்து முன்னெடுப்பேன் என வாக்குறுதி அளித்திருந்தார்.

அதே போன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வாணியம்பாடியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நியூடவுன் ெரயில்வே பாலம் கட்டும் பணி கதிர்ஆனந்த் எம்.பி. வெற்றி பெற்றதும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து மறுநாள் முதலிய கட்டும் பணியில் ஈடுபடுவார் என தனது தேர்தல் பிரசாரத்தின் போது வாக்குறுதி அளித்திருந்தார்.

ஆனால் இது வரை இதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. தற்போது ெரயில்வே கேட் மூடப்பட்டு ரெயில் சென்ற பின்னர் கேட் திறக்கும்வரை காலதாமதம் ஆவதால் பொது மக்கள் கடும் அவதியுடன் காத்திருக்கின்றனர்.

ஒரு மணி நேரத்துக்கு மேல் காத்திருப்பு

மேலும், மாலை நேரங்களில் அடுத்தடுத்து ெரயில்கள் தொடர்ந்து செல்வதற்காக ெரயில்வே கேட் தொடர்ந்து மூடப்படுவதால் ஒரு மணி நேரத்திற்கும் மேல் பொது மக்கள் காத்துக் கிடக்க வேண்டிய அவல நிலை இருந்து வருகிறது. இதனால் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் ஆபத்தான நிலையில் ெரயில்வே கேட்டை கடக்கும் சூழ்நிலை தற்போது வரை தொடர்கிறது.

ஒரு சில நேரங்களில் ெரயில்கள் வந்து செல்வதற்கே மணிக்கணக்கில் ெரயில்வே கேட் திறக்கப்படுவதற்காக காத்திருக்கும் மக்கள் போக்குவரத்து விதிகளை காற்றில் பறக்கவிட்டு சாலையின் இரு பகுதியிலும் வாகனங்களை நிறுத்தி விடுவதால் ெரயில்வே கேட் திறக்கப்படும் சமயத்தில் எதிர் வரும் வாகனங்கள் கேட்டை கடந்து செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் நிலையும் உள்ளது.

நடவடிக்கை

சமீபத்தில் தமிழகம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் தொகுதியில் தீர்க்கப்படாத 10 பிரச்சினைகள் குறித்து உடனடியாக மனு அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார். அதன் பேரில் வாணியம்பாடி தொகுதி எம்.எல்.எ.வும் பிரதான கோரிக்கையாக மனுவில் தெரிவித்திருந்தார்.

எனவே மக்களின் பிரச்சினையை தீர்க்க நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினரும் இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக செய்ய முன்வர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

============

பாக்்ஸ்

அடிப்படை வசதிகள் இல்லாததால் ெரயில் நிலையத்தில் பயணிகள் அவதி.

வாணியம்பாடி ரெயில் நிலையத்திலிருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் ெரயில்கள் மூலம் சென்னை சென்று திரும்புகின்றனர். ஆனால் இந்த ெரயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வு அறை இருந்தும் செயல்படாத நிலை உள்ளது. அதேபோல் இங்கு இருந்த கேண்டீன் மூடப்பட்டு பல ஆண்டுகளாக மீண்டும் திறக்கப்படாமல் உள்ளது,

மேலும் ெரயில் நிலையத்தில் நடைமேடை மட்டுமே நீடிக்கப்பட்டிருந்த நிலையில் பயணிகள் நிற்பதற்கு போதுமான நிழற்கூடம் இல்லை, இதனால் தற்போது உள்ள பணி காலத்திலும், மழைக்காலத்திலும், வெயில் காலத்திலும் ரெயிலுக்காக காத்திருக்கும் பயணிகள் அவதிப்பட நேரிடுகிறது. கழிப்பறை வசதியும் இல்லாததால் பயணிகள் அவதிபடும் நிலை உள்ளது. அதேபோல 1-வது நடைமேடையில் இருந்து, இரண்டு மற்றும் மூன்றாவது நடைமேடைக்கு மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு தேவையான எந்த விதமான வசதியும் இல்லாததால், பயணிகளே அவர்களை தண்டவாளத்தில் இறங்கி தூக்கிச் செல்லும் நிலை உள்ளது, அதுபோன்ற நேரஙு்களில் ரெயிலில் அடிபட்டு இறக்கும் நிலை உருலாகிறது. எனவே வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தர ெரயில்வே நிர்வாகம் முன் வர வேண்டும் பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Next Story