பவானிசாகர் அணையில் இருந்துகீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு


பவானிசாகர் அணையில் இருந்துகீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
x

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.

ஈரோடு

பவானிசாகர்

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.

தண்ணீர் திறப்பு

பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்காக கடந்த 15-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 100 கன அடி என்ற அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. அதுவும் திறக்கப்பட்ட சில மணி நேரத்தில் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

பராமரிப்பு பணிகள் முழுமையாக நிறைவடையாததால் தண்ணீர் நிறுத்தப்பட்டதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததால் கீழ்பவானி வாய்க்காலில் 19-ந் தேதி மீண்டும் தண்ணீர் திறக்கப்படும் என நீர்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் பவானிசாகர் அணையில் இருந்து மீண்டும் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது.

தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி வரை திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகரிப்பு

இந்த நிலையில் பவானிசாகர் அணையில் இருந்து நேற்று முன்தினம் பகல் 11 மணி நிலவரப்படி கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு நேற்று இரவு 8 மணி அளவில் வினாடிக்கு ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அப்போது அணையில் நீர்மட்டம் 82.67 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 283 கன அடி தண்ணீர் வந்தது. பவானி ஆற்றில் வினாடிக்கு 950 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.


Next Story