கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து கேரளாவிற்கு அனுப்பப்படும் வைக்கோல்


கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து  கேரளாவிற்கு அனுப்பப்படும் வைக்கோல்
x
தினத்தந்தி 26 Nov 2022 6:45 PM GMT (Updated: 26 Nov 2022 6:45 PM GMT)

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து கேரளாவிற்கு வைக்கோல் அனுப்பப்படுகிறது.

தேனி

கம்பம் பள்ளத்தாக்கின் கடைமடை பகுதியான குச்சனூர் அருகே உள்ள கூழையனூர் முதல் பழனிசெட்டிபட்டி வரை சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் இரு போக நெல் சாகுபடி செய்வது வழக்கம். இடைப்பட்ட காலத்தில் உளுந்து, பாசிப்பயறு, தட்டை பயறு போன்றவை சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நிலையில் விவசாயத்திற்கு போதிய ஆட்கள் கிடைக்காததால் கடந்த சில வருடங்களாக எந்திரங்கள் மூலம் நெல் அறுவடை செய்யப்படுகிறது.

எந்திரம் மூலம் அறுவடை செய்யும்போது நெல், வைக்கோல் தனித் தனியாக பிரித்தெடுக்கப்படுகிறது. இந்த வைக்கோல் மாடுகளுக்கு தீவனமாக பயன்படுகிறது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து கேரள மாநிலத்திற்கு அதிக அளவில் கொண்டு செல்லப்படுகிறது. கேரள மாநிலத்தில் ஏலக்காய், தேயிலை, காபி போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இதனால் கால்நடை தீவனங்கள் தேவை அதிகரித்துள்ளது. அங்கு நிலவும் தீவன பற்றாக்குறையை போக்க கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து வைக்கோலை வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். நெல் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் இருந்து எந்திரங்கள் மூலம் கட்டு கட்டாக கட்டி கூலியாட்கள் மூலம் லாரிகளில் ஏற்றி செல்கின்றனர் தற்போது வைக்கோல் கட்டுகள் ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது.


Related Tags :
Next Story