திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் விரக்தி: தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
தேனி அல்லிநகரத்தில் திருமணத்திற்கு பெண் கிடைக்காத விரக்தியில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
தேனி
தேனி அல்லிநகரம் மட்டன் ஸ்டால் வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 28). தனியார் நிறுவன ஊழியர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரது பெற்றோர் இறந்து விட்டனர். இதனால் செல்வக்குமார் அவரது தாத்தா ராமசாமியுடன் வசித்து வந்தார். செல்வக்குமாருக்கு திருமணம் செய்வதற்காக பெண் பார்த்து வந்தனர். ஆனால் அவருக்கு பெற்றோர் இல்லாததால் பல இடங்களில் பெண் தர மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அல்லிநகரம் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story