மதுரையில் விஜயகாந்திற்கு முழு உருவசிலை? - மேயர் பதில்


மதுரையில் விஜயகாந்திற்கு முழு உருவசிலை? - மேயர் பதில்
x

விஜயகாந்திற்கு சிலை வைக்கக்கோரி எம்.பி. மாணிக்கம் தாகூர் மதுரை மேயருக்கு கடிதம் எழுதினார்.

மதுரை,

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலக வளாகத்தில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நேற்று முன்தினம் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், மறைந்த நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்திற்கு மதுரையில் முழு உருவசிலை வைக்க வேண்டும் எனும் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் தெரிவித்துள்ளார். சிலை அமைப்பது குறித்து மாவட்ட அமைச்சர்களிடம் கலந்தாலோசித்து தமிழக அரசிடம் தெரிவிக்கப்படும் மேயர் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்திற்கு சிலை வைக்கக்கோரி எம்.பி. மாணிக்கம் தாகூர் மதுரை மேயருக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story