சுதந்திர போராட்ட தியாகிகளின் மின் நூல் தொகுப்பு வெளியீட்டு விழா


சுதந்திர போராட்ட தியாகிகளின் மின் நூல் தொகுப்பு வெளியீட்டு விழா
x

காரிமங்கலம் அரசு பெண்கள் கல்லூரியில் சுதந்திர போராட்ட தியாகிகளின் மின் நூல் தொகுப்பு வெளியீட்டு விழா

தர்மபுரி

காரிமங்கலம்:

காரிமங்கலம் அரசு பெண்கள் கலை கல்லூரியில் 75-ம் ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி கடந்த மார்ச் 1-ந் தேதி முதல் 75 நாட்களுக்கு சுதந்திர போராட்ட தியாகிகளின் வாழ்க்கை மற்றும் தியாகம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாணவிகள் பங்கேற்று சுதந்திர போராட்ட தியாகிகள் வாழ்க்கை வரலாறு குறித்து பேசினர். 75 நாட்கள் நடந்த இந்த உரையாடல் மின் தொகுப்பு வெளியீட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி முதல்வர் கீதா தலைமை தாங்கினார். வரலாற்றுத்துறை தலைவர் ராவணன் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக சுதந்திர போராட்ட தியாகியும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான ஐ.என்.ஏ.வில் பங்கேற்றவருமான சிவகாமி அம்மையார் கலந்து கொண்டு மின் நூல் தொகுப்பை வெளியிட்டு சுதந்திர போராட்டம் குறித்தும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ஐ.என்.ஏ. படை தியாகம் குறித்தும் பேசினார். தொடர்ந்து மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இதில் துறைத்தலைவர்கள் செந்தில்குமார், இளந்திரையன், ஜெயசீலன் மற்றும் மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வரலாற்றுத்துறை ஆசிரியர் சசிகுமார் நன்றி கூறினார்.


Next Story