விநாயகர் வடிவ கெடிகாரங்கள் விற்பனை


விநாயகர் வடிவ கெடிகாரங்கள் விற்பனை
x

திண்டுக்கல் அருகே, சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் வடிவ கெடிகாரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

திண்டுக்கல்

விநாயகர் சதுர்த்தி வருகிற 31-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பல்வேறு இடங்களில் விதவிதமான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் விநாயகர் வடிவிலான சுவர் ெகடிகாரங்களும் விற்பனைக்காக வந்துள்ளன. அதன்படி, திண்டுக்கல்-நத்தம் சாலையில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகே, விநாயகர் வடிவ கெடிகாரங்கள் விற்பனையில் ஈரோட்டை சேர்ந்த வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், பல்வேறு வடிவங்களில் சுவர் ெகடிகாரங்கள் விற்பனைக்கு வந்திருந்தாலும் தற்போது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் வடிவிலான ெகடிகாரங்களுக்கு தனி மவுசு உள்ளது. ஏராளமான பொதுமக்கள் விநாயகர் வடிக கெடிகாரங்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். ஒரு கெடிகாரம் ரூ.200 முதல் ரூ.2500 வரை ரகத்திற்கு ஏற்றபடி விற்பனை செய்யப்படுகிறது என்றார்.


Next Story