நாகையில், கஞ்சா விற்ற பெண்கள் உள்பட 4 பேர் கைது


நாகையில், கஞ்சா விற்ற பெண்கள் உள்பட 4 பேர் கைது
x

நாகையில், கஞ்சா விற்ற பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகப்பட்டினம்

நாகையில், கஞ்சா விற்ற பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கஞ்சா விற்பனை

நாகை வடக்கு நல்லியான் தோட்டம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக வெளிப்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.

அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் விற்பனைக்காக கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி (வயது 45), சுகன்யா (36) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சுடுகாட்டுப்பகுதியில்...

இதேபோல நாகை பாப்பான் சுடுகாட்டு பகுதியில் சந்தேகத்தின்பேரில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நாகை வ.உ.சி. தெருவை சேர்ந்த கார்த்திகேயன் (27), கலாநிதி (20) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

அதன்பேரில் அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story