ஜவுளிக்கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை


ஜவுளிக்கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
x

ஜவுளிக்கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

உப்பிலியபுரம்:

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள சிறுநாவலூர் மேற்குத் தெருவை சேர்ந்தவர் தர்மராஜ்(வயது 43). இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு சந்தோஷ், நிகில் என 2 மகன்கள் உள்ளனர். துறையூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் விற்பனையாளராக தர்மராஜ் வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் அவர் கடந்த 3 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்ததால், அவரை வேலைக்கு செல்லுமாறு அவரது மனைவி கூறியதாக தெரிகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தர்மராஜ் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உப்பிலியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செபாஸ்டின் சந்தியாகு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story