எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்


எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
x

எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அரியலூர் மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் எரிவாயு நிறுவனங்களின் சார்பில் எரிவாயு உருளை எடுத்து வரும் ஊழியர்கள் ரசீது தொகையை விட கூடுதலாக பணம் பெறுவதாக குற்றம் சாட்டினர். பின்னர் பதில் அளித்த மாவட்ட உணவு பொருள் வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் கூடுதலாக பணம் தர தேவையில்லை, அவ்வாறு கேட்கும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் எரிவாயு முகவர்கள் சார்பில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஆனால் எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை என கலந்து கொண்ட நுகர்வோர்கள் குற்றம் சாட்டினர். வரும் கூட்டங்களில் எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.


Next Story