உறுப்பினர்களுக்கான பொதுநிதியை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும்


உறுப்பினர்களுக்கான பொதுநிதியை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும்
x

உறுப்பினர்களுக்கான பொதுநிதியை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

நாகப்பட்டினம்

சிக்கல்:

உறுப்பினர்களுக்கான பொதுநிதியை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

ஒன்றியக்குழு கூட்டம்

நாகை மாவட்டம், கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் வாசுகி நாகராஜன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் புருஷோத்தமதாஸ், ஒன்றிய ஆணையர் தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:-

புருஷோத்தமதாஸ் (துணைத்தலைவர்):- கூட்டத்தில் செலவு கணக்குகள் மட்டுமே உறுப்பினர்களுக்கு படித்துக் காட்டப்படுகிறது. அரசிடமிருந்து வரும் நிதி பற்றி ஒன்றும் அறிய முடியவில்லை. வரும் கூட்டத்தில் வரவு பற்றிய கணக்கையும் தெரியப்படுத்த வேண்டும்.

பொதுநிதி

கண்ணன் (தி.மு.க.):-தேவூர் ஊராட்சியில் உள்ள வாரச்சந்தை நாகை மாவட்டத்தில் மிகப்பெரிய ஒன்றாகும். தற்போது சந்தைக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினையோ அல்லது உதயநிதி ஸ்டாலினை அழைத்து திறக்க வேண்டும். ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு பொது நிதியை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும்.

ரேவதி (தி.மு.க):- ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் பொது நிதியை ரூ.15 லட்சமாக உயர்த்தினால் மட்டுமே பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடியும்.

சமமாக பிரித்து கொடுக்க வேண்டும்

ரெங்கா (தி.‌மு.க.) ஒன்றியக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்‌. பொது நிதியை உறுப்பினர்களுக்கு சமமாக பிரித்துக் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு உறுப்பினர்கள் பேசினர்.

கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கருணாநிதி, வாசுகி, இல்முன்னிசா, ஹபிபுகனி, ஒன்றிய பொறியாளர்கள் ரவிச்சந்திரன், பாலச்சந்திரன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story