ஆடு திருடியவர் கைது


ஆடு திருடியவர் கைது
x

ஆடு திருடியவர் கைது செய்யப்பட்டார்.

மதுரை

மேலூர்,

மேலூர் அருகே சேக்கிபட்டியில் மூர்த்தி என்பவரது ஆடு ஒன்று திருட்டு போனது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மேலவளவு போலீசார் அதே ஊரை சேர்ந்த சின்னையா(வயது 35) என்பவரை கைது செய்தனர். இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக ராமர், சக்திவேல் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

பேரையூர் தாலுகா சின்னகட்டளையை சேர்ந்தவர் குமரன் (34). இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது ஆடுகளை ஆட்டு மந்தையில் அடைத்து விட்டு தூங்க சென்று விட்டார். ஆடுகளின் சத்தம் கேட்டு பார்த்தபோது மர்ம ஆசாமிகள் 2 செம்மறி ஆடுகளை தூக்கிச் சென்றனர். குமரன் அவர்களை விரட்டிய போது தப்பி சென்று விட்டனர். இது குறித்து சேடப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story