Normal
அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டம்
அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
சேலம்
சேலம்:
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று சேலம் கோட்டை மைதானத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர். இதற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க சேலம் மாவட்ட தலைவர் திருவரங்கன் தலைமை தாங்கினார். காப்பீட்டு கழக ஊழியர் சங்க பொதுச்செயலாளர் தர்மலிங்கம் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கலை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story