அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டம்


அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டம்
x

நெல்லையில் அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

நெல்லை:

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று வண்ணார்பேட்டை மேம்பாலம் அருகில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி, வருங்கால வைப்பு நிதி வட்டி குறைப்பு உள்ளிட்ட கொரோனா காலத்தில் பறிக்கப்பட்ட உரிமைகளை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

நெல்லை மாவட்ட தலைவர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். இணை செயலாளர் சகுந்தலா முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் கிறிஸ்டோபர், அனைத்து ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு மாவட்ட தலைவர் கோமதிநாயகம், செயலாளர் பிரகாஷ், அலுவலர் சங்க நிர்வாகிகள் சுப்பு, ஸ்டேன்லி, மாரிராஜா, சாலை பணியாளர்கள் சங்கம் செய்யது யூசுப் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.


Next Story