நிலத்தடி நீர் ஆதாரங்களை தூர்வார அரசு நிதி உதவி தேவை


நிலத்தடி நீர் ஆதாரங்களை தூர்வார அரசு நிதி உதவி தேவை
x

விருதுநகர் பகுதிக்கான நிலத்தடி நீர் ஆதாரங்களை தூர்வார அரசு நிதி உதவி கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்

விருதுநகர்,

விருதுநகர் பகுதிக்கான நிலத்தடி நீர் ஆதாரங்களை தூர்வார அரசு நிதி உதவி கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

உறை கிணறு

விருதுநகர் நகராட்சி பகுதியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பே குடிநீர் ஆதாரமாக விளங்கி வருவது ஆனைக்குட்டம் அணைப்பகுதி, ஒண்டிப்புலி மற்றும் காரிசேரி கல்குவாரிகள், சுக்கிரவாரபட்டி கோடைகாலகுடி நீர் தேக்கம் ஆகியவையாகும்.

இதில் ஆனைக்குட்டம் அணைப்பகுதியில் உறை கிணறுகள் தோண்டப்பட்டு அந்தக்கிணறுகளில் இருந்து குடிநீர் எடுக்கப்படுகிறது. ஆனாலும் இந்த குடிநீர் ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் குடிநீரில் அளவு வெகுவாக குறைந்து விட்டநிலையில் நகரின் குடிநீர் தேவைக்கு கைகொடுப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

நீர் ஆதாரங்கள்

இந்த நிலத்தடி நீர் ஆதாரங்களை தூர்வார வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தற்போது கோடை காலத்தில் இந்த நீர் ஆதாரங்கள் வறண்டு விட்ட நிலையில் தூர் வாருவதற்கு வாய்ப்பாக உள்ள நிலையில் இதனை தற்போது தூர்வார வேண்டியது அவசியமும், அத்தியாவசியமும் ஆகும்.

ஆனால் தூர்வார வேண்டிய நடவடிக்கைக்கு தேவையான நிதி நகராட்சியால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் நகராட்சியின் நிதி நிலைமையில்லை. நகராட்சி நிர்வாகம் இந்த நீர் ஆதாரங்களை தூர்வார வேண்டும் என்று தீர்மானங்கள் கொண்டு வந்த நிலையிலும் நிதி ஆதாரம் இல்லாத நிலையில் தூர்வாரும் நடவடிக்கை தாமதமாகும் நிலை உள்ளது.

வலியுறுத்தல்

எனவே மாவட்ட நிர்வாகம் விருதுநகர் நகராட்சிக்கு இந்த நீர் ஆதாரங்களை தூர்வாருவதற்கு அரசிடமிருந்து சிறப்பு நிதி ஒதுக்கீடு பெற்று இந்த நடவடிக்கையை மேற்கொள்ள உதவிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

வழக்கமாக ஆண்டுதோறும் கோடை கால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் அரசிடமிருந்து நிதி உதவி பெறும் நிலையில் விருதுநகர் நகராட்சி நிர்வாகத்திற்கு இந்த நிதி உதவி பெறுவதற்கான மதிப்பீடு தயாரித்து அதனை அரசிடம் இருந்து பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகமும் இதற்கான மதிப்பீடு தயாரித்து அரசிடம் இருந்து நிதி உதவி பெற தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story