'ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை அரசு விற்க வேண்டும்'


ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை அரசு விற்க வேண்டும்
x
தினத்தந்தி 14 Aug 2023 8:15 PM GMT (Updated: 14 Aug 2023 8:16 PM GMT)

‘ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை அரசு விற்க வேண்டும்’ என்று உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் வலியுறுத்தினார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தையத்தில், உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளதன் எதிரொலியாக விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் தென்னை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு பாமாயில் ரேஷன்கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. பாமாயில் இறக்குமதி செய்வதை மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். மேலும் நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேரள மாநிலத்தை போல, சமையல் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் தமிழக மக்கள் தேங்காய் எண்ணெயை பயன்படுத்த முன்வர வேண்டும். தென்னை மரத்தில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்வதற்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிலோ கண்வலி விதை ரூ.3,500 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ரூ.1,000-த்துக்கு விற்கப்படுகிறது. எனவே கண்வலி விதையை மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு தரமான விதைகளை வேளாண்மைத்துறையினர் வினியோகம் செய்ய வேண்டும். இயற்கை விவசாயம் செய்ய முன்வரும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் மானியம் வழங்க வேண்டும். இவ்வாறு அவா் கூறினார்.


Next Story