அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

கும்பகோணத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

கும்பகோணம் ;

கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் அனைத்து துறை சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு வட்டக்கிளைத் தலைவர் எஸ்.ரமேஷ் தலைமை தாங்கினார். பழைய ஓய்வூதியத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகை, உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை உடனே வழங்க வேண்டும். தொகுப்பூதியம் மற்றும் சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், செவிலியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் மற்றும் ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.


Next Story