பெண் கொலை வழக்கில் பேத்தி கைது


பெண் கொலை வழக்கில் பேத்தி கைது
x

பெண் கொலை வழக்கில் பேத்தி கைது

தஞ்சாவூர்

பாபநாசம் அருகே பெண் கொலை வழக்கில் அவரது பேத்தியை போலீசார் கைது செய்தனர். பணத்தகராறில் இந்த கொலை நடந்தது போலீசாரின் விசாரணையில் அம்பலமானது.

தனியாக வசித்த பெண்

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த பண்டாரவாடை கரை மேட்டுத் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி செல்வமணி (வயது 65). சீனிவாசன் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.

இவர்களில் ஒரு மகன் வெளிநாட்டிலும், மற்றொரு மகன் அதே பகுதியிலும் வசித்து வருகிறார்கள். அதே பகுதியில் செல்வமணி தனியாக வசித்து வந்தார்.

பித்தளை அண்டாவில் உடல்

நேற்று முன்தினம் மாலை செல்வமணியின் வீட்டுக்கு அவரது மகள் ராஜலட்சுமி சென்றபோது வீட்டின் கதவு பூட்டி இருந்தது. மேலும் வீட்டின் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசியது.

இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது செல்வமணி கொலை செய்யப்பட்டு பித்தளை அண்டாவில் தலை கீழாக உடல் இருந்தது தெரிய வந்தது.

பணத்தகராறு

இதுகுறித்து பாபநாசம் போலீார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் செல்வமணியின் பேத்தி வீரசிங்கம்பேட்டையை சேர்ந்த ரமேஷ் மனைவி ஜெயலட்சுமி(28) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர்.

ேபாலீசாரின் விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

செல்வமணியின் மகள் கீதா வெளிநாட்டில் உள்ளார். கீதா தனது தாய்க்கு மாதந்தோறும் ரூ.30 ஆயிரம் அனுப்பி வந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயலட்சுமி தனது பாட்டியிடம் பணம் கேட்டதால் இருவருக்கும் கடந்த 23-ந் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது.

பேத்தி கைது

இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயலட்சுமி தனது பாட்டி செல்வமணியை கொலை செய்து பித்தளை அண்டாவுக்குள் அமுக்கி வைத்து விட்டு எதுவும் தெரியாதது போல் நாடகம் ஆடி உள்ளார்.

மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசார் ஜெயலட்சுமியை கைது செய்தனர்.


Related Tags :
Next Story