அம்மன் கோவில்களில் மயான கொள்ளை விழா


அம்மன் கோவில்களில் மயான கொள்ளை விழா
x

வாணியம்பாடி மற்றும் நாட்டறம்பள்ளியில் மயானகொள்ள விழா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

வாணியம்பாடி- அம்பூர்பேட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் 249-ம் ஆண்டு மயான கொள்ளை திருவிழா பாலாற்றில் நேற்று மாலை நடந்தது. சாமி ஊர்வலமாக வந்து பாலாற்றை அடைந்்ததும் அங்கு வாணவேடிக்கை நடந்தது. இதனை காண வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

மயான கொள்ளை திருவிழா நடந்த பாலாற்று பகுதியில் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்பாண்டியன் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டையை அடுத்த கவுண்டப்பனூர் கிராமம், தேவலேரிபுரம் வட்டத்தில் உள்ள சுடலை மகாகாளியம்மன் கோவிலில் 15-ம் ஆண்டு மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் பால்குடம் எடுத்து வருதல், பக்தர்கள் கைகளால் பால் அபிஷேகம் செய்யப்பட்டது. மதியம் அம்மனுக்கு கூழ் வார்த்தலும், இரண்டாம் நாள் சிவராத்திரி விரதம் இருந்தவர்களுக்கு சிவ பூஜை, மாவிளக்கு எடுத்தல், தானிய வகைளை கொண்டு அம்மனுக்கு படையல் இடுதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நேற்று மகா காளியம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலம் நடந்தது. இதில் பக்தர்கள் மகா காளியம்மன் வேடம் அணிந்து ஊர்வலமாக சென்றனர். பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்றனர்.

நாட்டறம்பள்ளி

இதேபோல் நாட்டறம்பள்ளி பஸ் நிறுத்தத்தில் மயான கொள்ளை விழா நடைபெற்றது. இதில் நாட்டறம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story