ஆற்காட்டில் மயான கொள்ளை திருவிழா


ஆற்காட்டில் மயான கொள்ளை திருவிழா
x

ஆற்காட்டில் மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது.

ராணிப்பேட்டை

மாசி மாத அமாவாசை அன்று நடைபெறும் மயான கொள்ளை திருவிழாவை முன்னிட்டு ஆற்காடு நகரில் உள்ள இந்திரா நகர், தண்டு காரன் தெரு, தாருகான் தெரு, காந்திநகர், கிருஷ்ணாபுரம், லேபர் தெரு, டவுன் தெரு, முப்பதுவெட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மன் உற்சவர் ஊர்வலமாக சென்று பாலாற்றில் நிலை நிறுத்தப்பட்டு அங்கு மயான கொள்ளை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினார்கள். பல பக்தர்கள் காளி வேடம் உள்ளிட்ட பல்வேறு வேடங்களிலும், அலகு குத்தியும் வழிபாடு செய்தனர்.

இதில் ஆற்காடு மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு ஆற்காடு நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் கண்காணிப்பு கோபுரம் அமைத்து கண்காணித்தினர். தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது. திருட்டு சம்பவங்களை தவிர்க்க ஒலிபெருக்கி மூலம் பொது மக்களை உஷார் படுத்தினர். விழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


Next Story