வீட்டில் கஞ்சா செடி வளர்த்த ஆசாமி கைது


வீட்டில் கஞ்சா செடி வளர்த்த ஆசாமி கைது
x

குளச்சல் அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

குளச்சல்:

குளச்சல் அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகரை சேர்ந்தவர்

குளச்சல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி நேற்று குளச்சல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் அருகில் சந்தேகப்படும் வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். போலீசாரை கண்டதும் அவர் தப்பியோட முயன்றார்.

உடனே போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியை சேர்ந்த முருகன் (வயது 56) என்பதும், 20 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து கேரள மாநிலம் கொல்லத்தில் வசித்து வந்துள்ளார்.

கஞ்சா செடி வளர்ப்பு

கடந்த 2 ஆண்டுகளாக குளச்சல் அருகே இரும்பிலி பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை சோதனை செய்தபோது, 50 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதைதொடர்ந்து அவர் வசித்த வீட்டை சோதனை செய்தபோது, அங்கு 2 கஞ்சா செடிகள் வளர்த்து வந்ததும், அவர் பிரபல கஞ்சா வியாபாரி என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா, 2 கஞ்சா செடிகள், கஞ்சா விற்ற ரூ.4350, 3 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து முருகனை கைது செய்தனர்.

வாடகை வீட்டில் கஞ்சா செடிகள் வளர்த்தவர் கைது செய்யப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story