மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம்


மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம்
x

மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம்

திருப்பூர்

பொங்கலூர்

டிசம்பர் 3-ந்தேதி மாற்று திறனாளிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து அரசு நவம்பர் 14-ந்தேதி முதல் டிசம்பர் 3-ந்தேதி வரை தொடர் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்த உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் பொங்கலூர் வட்டார வள மையத்தின் சார்பில் தொடர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பொங்கலூர் கஸ்தூரி ரங்கப்ப நாயுடு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். அதுபோல் காட்டூர் அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சி தலைமை தாங்கினார். இந்த ஊர்வலங்களில் பொங்கலூர் ஒன்றியக்குழு தலைவர் வக்கீல் எஸ்.குமார் விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். மாணவ -மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய பொறுப்பு ஆசிரியர் சுரேஷ் தலைமையிலான ஆசிரியர்கள் செய்திருந்தனர்.



Next Story