சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்


சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
x

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் விசாலாட்சி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் சீதாலெட்சுமி, மாவட்டப் பொருளாளர் திருமாமகள் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.ஆர்ப்பாட்டத்தில், தடுப்பூசி நாளன்று தடுப்பூசி பணியுடன் யு-வின் ஆப் என்ற புதிய செயலி மூலம் டேட்டா என்ட்ரி பணியையும் சேர்த்து பார்த்திட வலியுறுத்தும் அரசின் அரசாணையை திரும்ப பெற வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஒரு டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டரை நியமித்து சுகாதார செவிலியர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும். மாநிலம் முழுவதும் சுமார் 2300 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்கள் காலியாக நிரப்பப்படாமல் உள்ளதை உடன் நிரப்ப வேண்டும். முற்றிலும் பழுதடைந்த தங்குவதற்கு தகுதியில்லா துணை சுகாதார மைய கட்டிடங்களுக்கு வாடகை பிடித்தம் செய்வதை நிறுத்தவும், பிடித்தம் செய்த தொகையை திரும்ப வழங்க வேண்டும். கிராம சுகாதார செவிலியர்கள் 5 வருடம் பணி முடித்தவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தில், மாவட்டம் முழுவதிலுமிருந்து 300-க்கும் மேற்பட்ட சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story