5-ம் வகுப்பு மாணவிக்கு இதய அறுவை சிகிச்சை


5-ம் வகுப்பு மாணவிக்கு இதய அறுவை சிகிச்சை
x
தினத்தந்தி 27 March 2023 6:45 PM GMT (Updated: 27 March 2023 6:45 PM GMT)

மயிலாடுதுறையில் தேசிய சுகாதார திட்டம் மூலம் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 5-ம் வகுப்பு மாணவியை கலெக்டர் நேரில் பார்வையிட்டு நலம் விசாரித்தார

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் தேசிய சுகாதார திட்டம் மூலம் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 5-ம் வகுப்பு மாணவியை கலெக்டர் நேரில் பார்வையிட்டு நலம் விசாரித்தார்.

5-ம் வகுப்பு மாணவி

மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மாலா.. இவருடைய மகள் திவ்யா (வயது 10). இவர் அந்த பகுதியில் உள்ள நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் உண்டு, உறைவிட பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். திவ்யாவுக்கு இருதய பிரச்சினை இருப்பதை கண்டறிந்த டாக்டர்கள் அவளுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து திவ்யாவின் தாய் தனது மகளின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு கலெக்டர் மகாபாரதிக்கு கோரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்து சிறுமிக்கு ஐஸ்வர்யா அறக்கட்டளை நிதி உதவி மூலம் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

கலெக்டர் நலம் விசாரித்தார்

இந்தநிலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மாணவி திவ்யாவை மாவட்ட கலெக்டர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது மாணவியின் தாயார் அறுவை சிகிச்சைக்கு உதவி செய்த தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கும், மாவட்ட கலெக்டருக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.


Next Story