இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம்


இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம்
x

திசையன்விளையில் இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி

திசையன்விளை:

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட அளவிலான இந்து முன்னணி கோட்ட பொதுக்குழு கூட்டம் திசையன்விளையில் நேற்று நடந்தது. மாநில பொதுச்செயலாளர் அரசு ராஜா தலைமை தாங்கினார். திசையன்விளை நகர செயலாளர் மணிகண்டன், பேரூராட்சி கவுன்சிலர் லிவ்யா, தொழில் அதிபர்கள் அரிகரசுதன், கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திசையன்விளை நகர இந்து முன்னணி தலைவர் ஜெயசீலன் வரவேற்றார்.

கூட்டத்தில் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், பொதுச்செயலாளர் முருகானந்தம், இணை அமைப்பாளர் பொன்னையா, மாநில செயலாளர் குற்றாலநாதன், மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் மாய கூத்தன், சக்சிவேல் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர்.

கூட்டத்தில் மதமாத தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும். இந்து முன்னணியினர் மீது அரசு பொய் வழக்கு போடுவதை நிறுத்த வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் திரளான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Next Story