வரலாற்று சிறப்பு மிக்க ஆவணங்களை வழங்கலாம்


வரலாற்று சிறப்பு மிக்க ஆவணங்களை வழங்கலாம்
x

கலெக்டர் அலுவலகத்தில், வரலாற்று சிறப்பு மிக்க ஆவணங்களை வழங்கலாம் என்று திண்டுக்கல் கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்

சென்னையில் தமிழ்நாடு ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறை செயல்பட்டு வருகிறது. இதன் கிளை அலுவலகம் மதுரையில் பழைய ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படுகிறது. இங்கு அரசு துறைகளின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதேநேரம் மிகவும் பழமை வாய்ந்த கலை, பண்பாடு, நாகரீகத்தை அடையாளமாக கொண்ட வரலாற்று சிறப்பு மிக்க ஆவணங்கள் எதுவும் தனிநபர், நிறுவனங்கள், மடங்கள், தேவாலயம், பள்ளிவாசல்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தால் அவற்றை தமிழ்நாடு ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறை அலுவலகம் பெற்று பாதுகாத்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது மேற்கண்ட வரலாற்று சிறப்பு மிக்க ஆவணங்கள் வருங்கால சந்ததியினருக்கு பயன்படும் வகையில் இணையதளம் மூலம் Computer//Internet Scanning/ Digitization முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதன் விவரங்கள் ஊடகங்களிலும், புதுடெல்லி தேசிய ஆவண காப்பகத்திலும் பாதுகாக்கப்பட உள்ளது. எனவே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் எதையும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், தனியார் நிறுவனங்கள் தங்கள் வசம் வைத்திருந்தால் அதனை திண்டுக்கல் மாவட்ட கலெக்டரிடமோ அல்லது மதுரை மாவட்ட ஆவண காப்பகத்திலோ வழங்கலாம். இந்த தகவலை கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.


Next Story