வீடு புகுந்து நகை திருட்டு
வீடு புகுந்து நகையை திருடி சென்றனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி. தொழிலாளி. இவருடைய மனைவி பேச்சியம்மாள் (வயது 33). இவர்களது மகள் சத்திரப்பட்டி சாலையில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார். இந்தநிலையில் தனது மகளை அழைப்பதற்காக பேச்சியம்மாள் வீட்டை பூட்டாமல் பள்ளிக்கூடத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் வீட்டிற்கு வரும் போது எதிர் வீட்டில் உள்ளவர்கள் உனது வீட்டிற்கு ஒருவர் தேடி வந்ததாக பேச்சியம்மாளிடம் கூறினர். இதையடுத்து அவர் வீட்டிற்குள் சென்று பாா்த்த போது அங்கு யாரும் இல்லை. அப்போது பீரோவில் வைத்திருந்த சாவியை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் சின்னத்தம்பிக்கு தகவல் தெரிவித்தார். சின்னதம்பி தான் வைத்திருந்த மற்றொரு சாவி மூலம் பீரோவை திறந்து பார்த்ததில் 6 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.