வீட்டில் தீ; மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்


வீட்டில் தீ; மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 23 Dec 2022 6:45 PM GMT (Updated: 23 Dec 2022 6:47 PM GMT)

கடையத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமாயின.

தென்காசி

கடையம்:

கடையம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை மனைவி பூமணி (வயது 60). நேற்று மாலை வீட்டில் பூமணியும், அவரது பேரன் விக்ரமும் இருந்தனர். அப்போது வீட்டின் மேல் பகுதியில் உள்ள மின் ஒயரிலிருந்து இருந்து திடீரென தீ பிடித்துள்ளது. இதனை பார்த்த பூமணி தனது பேரனை தூக்கிக்கொண்டு வெளியே ஓடி வந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் 2 மோட்டார் சைக்கிள்கள், கட்டில் மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. சிமெண்டு சீட்டால் ஆன வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை முழுவதுமாக அணைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story