வீடு,வீடாக துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு பிரசாரம்


வீடு,வீடாக துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு பிரசாரம்
x
திருப்பூர்

உடுமலை:

உடுமலை வட்டாரத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 20-க்கும் குறைவாக உள்ள 18 பள்ளிகளுக்குட்பட்ட பகுதிகளில் 5 வயதுக்கு மேற்பட்டவர்கள் 110 பேர் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் வட்டார கல்வி அலுவவர்கள் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் அந்தந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று, பள்ளியின் சிறப்பம்சங்கள், பள்ளியில் காணப்படும் வசதிகள், அரசின் விலையில்லா நலத்திட்டங்கள் மற்றும் அரசு கல்வி உதவித்தொகை ஆகியவை குறித்த துண்டு பிரசுரத்தை பெற்றோரிடம் வழங்கி மாணவர்கள் சேர்க்கைக்கு ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

 அத்துடன் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோரது அறிவுரைப்படி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களை அழைத்து பஞ்சாயத்து அட்மிஷன் விழாவும் நடத்தினர். இதைத்தொடர்ந்து இந்த 18 பள்ளிகளுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சில பள்ளிகளில் நேற்றுவரை, முதல் வகுப்பில் 25 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மாணவர்கள் சேர்க்கைக்காக, வருகிற 8-ந்தேதி இந்த பள்ளிகளில் பஞ்சாயத்து அட்மிஷன் விழா நடைபெற உள்ளது.


Next Story