ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை: தெலுங்கானா கவர்னர் தமிழிசை


ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை: தெலுங்கானா கவர்னர் தமிழிசை
x

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தமிழக கவர்னருக்கும், தமிழக அரசுக்குமான சட்டப் போராட்டம். அதில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை என்று தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

திருச்சி,

தெலுங்கானா மற்றும் புதுவை துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திருச்சியில் செய்தியாளர்களூக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. பிரதமர் மோடி கூறியதைப் போல புதுச்சேரியை சிறந்த புதுச்சேரியாக கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டு வருகிறது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தமிழக கவர்னருக்கும், தமிழக அரசுக்குமான சட்டப் போராட்டம். அதில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.

கச்சத் தீவில் வழிபாட்டுத் தலங்கள் தவறாக நடத்தப்படுகிறது என கூற முடியாது. அங்கு இலங்கை கடற்படை சார்பில் புத்தர் சிலை அமைத்துள்ளது பற்றி பிரச்சினைகளை கொண்டு வரக்கூடாது என்பதுதான் எனது எண்ணம். எம்மதமும் சம்மதம் என்பதை நாம் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.


Next Story