நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து சரியான நேரத்தில் அறிவிப்பேன்


நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து சரியான நேரத்தில் அறிவிப்பேன்
x

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து சரியான நேரத்தில் அறிவிப்பேன் என தஞ்சையில், டி.டி.வி.தினகரன் கூறினார்

தஞ்சாவூர்

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து சரியான நேரத்தில் அறிவிப்பேன் என தஞ்சையில், டி.டி.வி.தினகரன் கூறினார்.

பேட்டி

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரையில் நடைபெற்றது எழுச்சி மாநாடு அல்ல. அது எடப்பாடி பழனிசாமிக்கு வீழ்ச்சி மாநாடு. இந்த மாநாட்டுக்காக அவர் எவ்வளவு செலவு செய்திருந்தாலும், அதிகபட்சமாக 2½ லட்சம் பேர் மட்டுமே பங்கேற்றனர். 25 லட்சம் பேர் பங்கேற்றதாக கூறுவது பொய். எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சி தமிழர் என்ற பட்டம் கொடுத்து இருப்பதன் மூலம் புரட்சி என்ற வார்த்தைக்கு மரியாதை இல்லாமல் போய்விடும்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர் கொடுத்த வாக்குறுதிக்கு நேர்எதிராக செயல்படுகிறார். மு.க.ஸ்டாலின் கையில் ஆட்சியை கொடுத்ததற்காக மக்கள் வருந்துகின்றனர். எடப்பாடி பழனிசாமிக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இவர்களுக்கு மாற்று சக்தியாக அ.ம.மு.க.வை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

பா.ஜ.க.வுடன் உறவு கிடையாது

பா.ஜ.கவுடன் எனக்கு எந்த உறவும் கிடையாது. நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து சரியான நேரத்தில் அறிவிப்பேன். கூட்டணி அமையும்போது தேசிய கட்சி தான் தலைமை வகிக்கும். கூட்டணி இல்லை என்றாலும் தனித்து போட்டியிடுவோம்.

காவிரியில் தண்ணீர் தர கர்நாடகம் மறுப்பதால் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுப்பது தான் சரியாக இருக்கும். ஓ.பன்னீர்செல்வமும், நானும் வரும்காலம் குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம். தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய அனைத்து கட்சிகளும் முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் ரெங்கசாமி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story