எய்ம்ஸ் கட்டி முடிக்கிற வரைக்கும் செங்கல்லை கொடுக்க மாட்டேன் - உதயநிதி ஸ்டாலின்


எய்ம்ஸ் கட்டி முடிக்கிற வரைக்கும் செங்கல்லை கொடுக்க மாட்டேன் - உதயநிதி ஸ்டாலின்
x
தினத்தந்தி 23 March 2024 5:36 PM GMT (Updated: 23 March 2024 6:09 PM GMT)

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிய செங்கல்லை இன்னும் பத்திரமாக வைத்துள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

மதுரை,

மதுரையில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது;

"கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி மதுரைக்கு வந்தார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிவிட்டு சென்றார். அந்த கல்லை இன்னும் பத்திரமாக வைத்துள்ளேன். நீங்கள் மருத்துவமனையை கட்டிமுடிக்கும் வரை நான் இந்த செங்கல்லை கொடுக்க மாட்டேன்.

2020ல் நாட்டை வல்லரசாக்குவேன் எனக்கூறினார். ஆனால் இப்போது 2047ம் ஆண்டு நாட்டை வல்லரசாக மாற்றுவேன் என கூறியுள்ளார். பிரதமர் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. ஆனால் இந்தி, சமஸ்கிருதம் மொழிகளுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்.

மிக்ஜம் புயல் பாதிப்பு, மற்றும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டபோது பிரதமர் தமிழகம் வரவில்லை. மழை வெள்ள நிவாரண நிதியாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் 37 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டார். ஆனால் மத்திய நிதி மந்திரியோ, நாங்கள் என்ன ஏ.டி.எம். இயந்திரமா எனக்கேட்டார். மழை, வெள்ள பாதிப்புக்காக தமிழகத்துக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் நிதி கூட கொடுக்கவில்லை." இவ்வாறு அவர் பேசினார்.


Next Story