பவானிசாகர் அருகே வன கிராமங்களில் 15 கி.மீ. தூரம் பயணித்து தடுப்பூசி செலுத்திய மருத்துவ குழுவினர்


பவானிசாகர் அருகே வன கிராமங்களில் 15 கி.மீ. தூரம் பயணித்து தடுப்பூசி செலுத்திய மருத்துவ குழுவினர்
x

பவானிசாகர் அருகே வன கிராமங்களில் மருத்துவ குழுவினர் 15 கி.மீ. தூரம் பயணித்து தடுப்பூசி செலுத்தினா்

ஈரோடு

தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு காச நோய், புற்றுநோய், தட்டம்மை உள்ளிட்ட 11 வகையான தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. இந்த தடுப்பூசிகளை செலுத்தாமல் தவறவிட்ட 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு இந்திர தனுஷ்- 5.0 என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு தவணை தடுப்பூசி முகாமை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து முதல் கட்ட சிறப்பு முகாம் கடந்த 7-ந் தேதி தொடங்கியது. இந்த முகாம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) வரை நடக்கிறது. அதன்படி பொது சுகாதாரத்துறை சார்பில் மருத்துவக் குழுவினர் தடுப்பூசி செலுத்தாத குழந்தைகளின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்துகின்றனர்.

பவானிசாகர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் சுஜில் குட்டை, நந்திபுரம், பூதி குப்பை உள்ளிட்ட வன கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த வன கிராமங்களுக்கு பவானிசாகரில் இருந்து அடர்ந்த வனப்பகுதி வழியாக 15 கிலோ மீட்டர் தூரம் கரடு முரடான பாதைகளில் பயணித்து வனப்பகுதியில் ஓடும் ஆற்றை கடந்து தான் செல்ல முடியும். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் தடுப்பூசி செலுத்துவதற்காக மருத்துவ குழுவினர் வாகனம் மூலம் யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள அடர்ந்த வனப்பகுதி வழியாக 15 கிலோ மீட்டர் தூரம் பயணித்து வன கிராமங்களை அடைந்தனர். பின்னர் தடுப்பூசி செலுத்தாத குழந்தைகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசிகளை செலுத்தினர்.


Next Story