தெற்குஆரைகுளத்தில்ரூ.27 லட்சத்தில் குடிநீர் திட்டப்பணிக்கு அடிக்கல்
தெற்குஆரைகுளத்தில் ரூ.27 லட்சத்தில் குடிநீர் திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டுவிழா நடந்தது.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே தெற்குஆரைக்குளத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்ட நிதியில் இருந்து ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் வீட்டு குடிநீர் இணைப்பு திட்டம் மற்றும் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவுக்கு ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். ஆரைக்குளம் பஞ்சாயத்து தலைவர் சங்கரிசெல்வம், பஞ்சாயத்து துணைத் தலைவர் உமா, முன்னாள் பஞ்சாயத்து துணைத் தலைவர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் வீட்டு குடிநீர் இணைப்பு திட்டம் மற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியராஜன், யூனியன் உதவி பொறியாளர் ரவி, கொடியன்குளம் பஞ்சாயத்து தலைவர் அருண்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இமாம், யூனியன் மேற்பார்வையாளர் பாலசுப்ரமணியன், தெற்கு ஆரைக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமசுப்பிரமணியன் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.