தஞ்சையில், தி.மு.க.வினர் உண்ணாவிரதம்


நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தஞ்ைசயில், தி.மு.க.வினர் உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரதத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தஞ்ைசயில், தி.மு.க.வினர் உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரதத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

உண்ணாவிரதம்

நீட் தேர்வு விவகாரத்தில் மத்தியஅரசு மற்றும் தமிழக கவர்னரை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு மத்திய, தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க. மருத்துவர் அணி, மாணவர் அணி, இளைஞரணி சார்பில் உண்ணாவிரதம் நேற்று நடந்தது. உண்ணாவிரதத்துக்கு உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், அண்ணாதுரை, டி.கே.ஜி. நீலமேகம், மேயர் சண். ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை மாநகர துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி வரவேற்று பேசினார்.

அமைச்சர் தொடங்கி வைத்தார்

உண்ணாவிரதத்தை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்து பேசினார். தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. கலந்து கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பேசினார். உண்ணாவிரதத்தில் விவசாய அணி அமைப்பாளர் ஜித்து, மாவட்ட பொருளாளர் எல்.ஜி. அண்ணா, மாவட்ட அவைதலைவர் இறைவன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் முகில் வேந்தன், ராஜா, ஆதி ராஜேஷ் மற்றும், அனைத்து பிரிவு நிர்வாகிகள், டாக்டர்கள், கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story