தஞ்சையில், காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டம்
தஞ்சையில், காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டம்
ராகுல்காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் காங்கிரசார் மாவட்ட தலைநகரங்களில் சத்தியா கிரக போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். அதன்படி தஞ்சை பனகல் கட்டிடம் அருகே காங்கிரஸ் கட்சியினர் நேற்று சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாநகர்மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தஞ்சை வடக்கு மாவட்டத்தலைவர் லோகநாதன், முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சி.கி.வரதராஜன், கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை வேண்டும் என்றே தகுதி நீக்கம் செய்துள்ளது. இதை வன்மையாக கண்டிப்பதோடு உடனடியாக தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பேராவூரணி சிங்காரம், தஞ்சை மாநகர் மாவட்ட பொருளாளர் பழனியப்பன், கும்பகோணம் மாநகர தலைவர் மிர்சாவுதீன், பட்டுக்கோட்டை நகர தலைவர் ராமசாமி உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்டனர்.